வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்!!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

கிழக்குச் சீமையிலே படத்தில் தொடங்கி தற்போது பல முன்னனி நடிகர்களுடனும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் தவசி. குறிப்பாக வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் அப்பாவாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் குறி சொல்லும் சாமியாராக நடித்து தன் நகைச்சுவைத் திறமையால் அசத்தியிருப்பார். இவர் அண்ணாத்த படத்திலும் நடித்து வந்தார்.
இதற்கிடையே உடல் நலம் பாதிகப்பட்ட தவசியின் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலானது. உடல் மெலிந்து காணப்பட்ட தவசி அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், யாரேனும் உதவுமாறும் பதிவிட்டிருந்தனர். இதனைப் பார்த்த சிம்பு 1 லட்சம் நிதியுதவி செய்திருந்தார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த தவசி அவர்கள் சற்று முன் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.