October 21, 2020

தட்பம் தவிர் திரைப்படத்தின் அதிபயங்கர மிரட்டல் டிரெய்லர் வெளியானது!!!

நடிகர் பிரசன்னா அவர்கள் சற்றுமுன் தட்பம் தவிர் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கிறது இந்த டீஸர்.

தட்பம் தவிர் திரைப்படம் மர்மங்கள் நிறைந்த திகில் திரைப்பட வகையை சேர்ந்தது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சக்திவேல் அவர்கள் தயாரித்து வழங்குகிறார். ஜெகன் நாராயணன் அவர்கள் இயக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா சிவராமன் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் நாயகனாக கார்த்திக் அசோகன் மற்றும் நாயகியாக பாயல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கார்த்திக் அசோகன் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர். மேலும் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்தின்டிரெய்லரின் மூலம் கார்த்திக் அசோகன் அவர்கள் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் இவர் மர்ம நாவல்களை எழுதும் எழுத்தாளராகவும் தெரிகிறது. அதோடு இதில் வரும் மற்ற திகிலான காட்சிகளை பார்க்கும்போது ஒரு மர்ம நாவல் எழுத்தாளரின் மனநிலை மாற்றமும் அது சம்பந்தப்பட்ட விளைவுகளும் கதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இந்த படத்திற்கான டிரெய்லரை நடிகர் பிரசன்னா அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


%d bloggers like this: