November 30, 2020

”தட்பம் தவிர்” டிரெய்லரை வெளியிடும் பிரசன்னா!!!

தட்பம் தவிர் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் பிரசன்னா அவர்கள் வரும் 24ஆம் தேதி அன்று மதியம் ஒரு மணி அளவில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மர்ம காட்சிகள் நிறைந்த திகில் திரைப்பட வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தை இயக்குநர் சக்திவேல் அவர்கள் தயாரித்து வழங்குகிறார். ஜெகன் நாராயணன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா சிவராமன் அவர்கள் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக கார்த்திக் அசோகனும் கதாநாயகியாக பாயில் அவர்களும் நடித்துள்ளனர். கார்த்திக் அசோகன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர்.

தேனிலவுக்கு சென்ற இளம் ஜோடிகள் காட்டுக்குள் சிக்கி தவிப்பது போன்ற காட்சிகளை கதையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் பிரசன்னா அவர்கள் வரும் 24 ஆம் தேதி அன்று மதியம் ஒரு மணி அளவில் வெளியிடப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

%d bloggers like this: