January 27, 2021

கார்த்திக்கின் நடிப்பில் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது

நடிகர் சிவகுமாரின் மகனும் சூரியாவின் இளைய சகோதரருமாகிய நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் எடுக்கப்பட்டு வரும் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக செய்திகள் சமூக வலைத்தளங்களின் வழியாக வெளியாகி இருக்கிறது.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

காதல் நாடக வகை திரைப்படமாகிய சுல்தான் திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் பொட்டன்சியல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இந்த திரைப்படத்திற்கு இசையைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். கார்த்திக் சிவக்குமார், ராஷ்மிக்கா மந்தனா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல திரைப்படங்களின் படப்பிடிப்பும் வெளியீட்டு தேதியும் தள்ளிப் போடப் பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கங்களின் மூலம் தெரிவித்துள்ளனர். விரைவில் இது ஓ டி டி தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: