January 18, 2021

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல்!!!! நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ!!!

நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் காற்றும் அதிவேகமாக வீசிவருகிறது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இதனையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல மாத இடைவெளிக்கு திரைத்துறை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக கன மழை பெய்துவருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பும் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தற்போது ஸ்டண்ட் சில்வா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நிவர் புயல் துவங்கியிருக்கிறது. இங்கு படக்குழுவினர் அனைவரும் நலமாக இருக்கிறோம். பொதுமக்களாகிய நீங்களும் பத்திரமாக இருங்கள் என்றுப் பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: