November 30, 2020

சூரரைப் போற்று டிரெய்லர் 26ஆம் தேதி வெளியாகிறது!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் சிக்யா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பால முரளி, பரேஸ் ராவல், ஊர்வசி, கருணாஸ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கங்கள் திறக்கப்படாத காரணத்தால் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஏர்டெக்கான் நிறுவனரான ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படத்திலிருந்து அறிவு வரிகளில் மாறா தீம் பாடல், விவேக் வரிகளில் வெய்யோன் சில்லி, ஏகதேசி வரிகளில் மண்ணுருண்ட, சிநேகன் வரிகளில் காட்டுப் பயலே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே நேற்று அருண் ராஜா காமராஜ் வரிகளில், கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா குரலில் ஆகாசம் பாடல் சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகளையும் கடந்து வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு சூரரைப் போற்று திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

%d bloggers like this: