October 21, 2020

விரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2

1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் சித்தி. அதன் இரண்டாம் பாகமாகக் கடந்த ஜனவரி முதல் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இத்தொடரில் ராதிகா சரத்குமார், பொன்வண்ணன், நந்தன் லோகநாதன், பிரீத்தி, ரூபினி, அஸ்வின் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சுந்தர் கே. விஜயன் இத்தொடரை இயக்கி வருகிறார்.

சாரதா என்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்த்த பெண் தனது குடும்ப சந்தோசத்தை நிலை நாட்ட அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த தொடரின் கதை நகர்கின்றது

மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு 60 நபர்களுடன் சின்னதிரை படப்பிடிப்பு நடத்தலாம் எனத் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தது. ஆனால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பல தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சித்தி தொடரின் முக்கிய கதாபாத்திரமான ராதிகா தன் டிவிட்டர் பக்கத்தில் இத்தொடரைப் பற்றிப் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘ சித்தி 2 தொடரில் உடல் நலப் பிரச்சினைகள் உள்ள நடிகர்களை நாங்கள் மாற்ற வேண்டியிருந்தது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துப் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் , விரைவில் இந்த மாற்றத்திற்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் சித்தி 2 தொடர் ஒளிபரப்பாகும் ‘ என அறிவித்துள்ளார். இந்த பதிவிற்குச் சித்தி ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

%d bloggers like this: