November 30, 2020

சினேகா பிரசன்னா தம்பதியினரின் 8ஆம் ஆண்டு திருமண நாள்!!

சுஹாசினி ராஜா ராம் நாயுடுவான  சினேகா விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானார். இவரின் நடிப்பு மட்டுமல்லாது புன்னகையால் அனைவரையும் கவர்ந்தவர். புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சினேகா  ஒரு வெற்றி நாயகியாக வளம் வந்தார். 2000ஆம் ஆண்டில் திரைத்துறையில் நுழைந்த சினேகா 40 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிப்பாடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவுடம் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு விஹான் என்று பெயரிட்டனர்.  24 ஆம் தேதி ஜனவரி 2020ல் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பின்னரும் தன் நடிப்புப் பணியைத் தொடர்ந்து வரும் சினேகா சமீபத்தில் வெளியான பட்டாஸ் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மே மாதம் 11ஆம் தேதி 2012ஆண்டு திருமணம் செய்து கொண்ட சினேகா பிரசன்னா தம்பதியினர் இன்று தங்களது எட்டாவது திருமண நாளை சிறப்பிக்கின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: