November 30, 2020

கருப்பு உடையில் நீண்ட தாடியுடன் சிம்பு வெளியிட்ட சூப்பர் கூல் புகைப்படம்!!!

இளம் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.  மேலும் சிம்பு உடற் பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார்.

சிலம்பரசன் டி ஆர் என்ற யூ டியூப் சேனலையும் துவக்கியிருக்கிறார் சிம்பு. இதற்கிடையே தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,”என்னுடைய இந்த முழு மாற்றத்திற்கும் வழிகாட்டிய மற்றும் உதவிய உச்ச சக்திக்கு நன்றி, மற்றும் நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் அன்பு எனக்கு உலகம் என்று பொருள்” என்று பதிவிட்டுள்ளார். கருப்பு உடையில், நீண்ட தாடியுடன் உலாவரும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

%d bloggers like this: