November 25, 2020

ஜப்பானில் நிகழும் சர்வதேச திரைப்பட விழாவில் சில்லுக்கருப்பட்டி

சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதா சுரேஷ், லீலா, சாரா அர்ஜூன் மற்றும் பலர் நடித்துக் கடந்த 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் வெளியான திரைப்படம் சில்லு கருப்பட்டி. இந்தப் படத்தைப் பெண் இயக்குநரான ஹலிதா சமீன் இயக்கியிருந்தார். வெங்கடேசன் என்பவர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது. பிரதீப் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

4 வெவ்வேறு கதைகளை ஒரே மையப் பொருளாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் ஹலிதா 2020ஆம் ஆண்டின் சிறந்த பெண் இயக்குநருக்கான ஜே.எஃப்.டபல்யூ விருதைப் பெற்றிருந்தார்.

அது மட்டுமினிறி டொராண்டோ தமிழ்த் திரைப்பட விழாவில் சில்லு கருப்பட்டி படம் விருதை வென்றுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் தற்பொழுது ஜப்பானில் ஒசாகா நகரத்தில் நிகழும் சர்வதேச திரைப்பட விழாவில் நவம்பர் 1 அன்று இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படமாக “சில்லுக்கருப்பட்டி” திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: