November 25, 2020

ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் “சிகரம் தொடு”

தமிழக காவல்துறையில் சிறந்த காவல் அதிகாரி செல்லப்பா தனது வேலை நேரத்தில் ஒரு காலை இழக்கிறார். தன்னுடைய மகன் முரளிபாண்டியனை காவல் அதிகாரி ஆக்க வேண்டும் என்று எண்ணுகிறார். தனக்கு அறவே பிடிக்காத போதிலும் தன் தந்தைக்காக காவல் துறையில் சேர்ந்து விடுகிறார் முரளி பாண்டியன். தன்னை போலவே காவல் துறை அறவே பிடிக்காத அம்புஜத்தின் மீது காதல் கொள்கிறார். ஆனால் முரளி பாண்டியன் ஒரு காவல்துறை அதிகாரி என்று தெரிந்து அம்புஜம் அவரை புறக்கணித்து விடுகிறார்.

அதே நேரம் ஏ டி எம் மூலம் நூதன முறையில் பலருடைய பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல் துறை திரகிறது.

அந்த கும்பலை முரளி பாண்டியன் எப்படி பிடித்தார்? அம்புஜத்திற்கு வரவிருந்த ஆபத்திலிருந்து அவரை எப்படி மீட்டார்? அம்புஜம் முரளி பாண்டியனை ஏற்று கொண்டாரா? போன்ற கேள்விகளுக்கான பதிலை கதையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் தான் “சிகரம் தொடு”.

2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌரவ நாராயணன் அவர்கள் எழுதி இயக்கி இருந்தார். டி. இமானின் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தை சித்தார்த் ராய் கபூர் யூ டி வி மோஷன பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு , மோனல் கஜார் , சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளிவந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பகிர்ந்து வருகின்றார்கள்.

%d bloggers like this: