October 29, 2020

ஷ்ரேயாவின் பிறந்தநாளில் வெளியான “கமனம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!!

நடிகை ஷ்ரேயாவின் பிறந்த நாளாகிய இன்று அவர் நடிக்கும் “கமனம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

2001ஆம் ஆண்டு வெளிவந்த “இஸ்டம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் ஷ்ரேயா சரண். இவர் தமிழில் முதன் முதலில் நடித்த திரைப்படம் “எனக்கு 20 உனக்கு 18”.

2007ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடித்திருந்தார். அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், தடகா மற்றும் தமிழில் நரகாசுரன், சண்டக்காரி ஆகிய திரைப்படங்களில் தற்போது இவர் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படமான “கமனம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

%d bloggers like this: