November 25, 2020

தம்பியுடன் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்!!!

2003இல் காதல் கொண்டேன் படத்தின் மூலமாகத் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். பிறகு 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல வித்தியாசமான வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக இவரது இயக்கத்தில் சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியானது.

தற்போது மன்னவன் வந்தானடி,நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் விரைவில் இவரின் இயக்கத்தில் வெளிவர உள்ளது.

செல்வராகவன் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார் . தனுஷின் இந்த முன்னேற்றத்திற்குப் பக்கபலமாக இருத்தவர் செல்வ ராகவன். தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் தன் டிவிட்டர் பக்கத்தில் பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார் செல்வ ராகவன் . இந்நிலையில் தற்போது தன் தம்பி தனுஷ் உடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக ரசிகர்கள் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு பற்றிச் செல்வ ராகவனிடம் கேட்டு வருகின்றனர்.

அண்மையில் திங் மியூசிக் நிறுவனம் புதுப்பேட்டை படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர்களைப் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டு வருகிறது. தற்போது செலவ ராகவன் தன் தம்பி தனுஷ் உடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதால் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். விரைவில் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்திலோ அல்லது மீண்டும் தனுஷை வைத்து செல்வ ராகவன் புதிய ஒரு திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


%d bloggers like this: