November 25, 2020

செல்வராகவன் வீட்டில் ஜனவரி ரிலீஸ்

தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வ ராகவன். இவர் நடிகர் தனுஷின் மூத்த சகோதரர் ஆவார். இவர் 2002இல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். பிறகு 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர். இறுதியாக இவரின் இயக்கத்தில் சூர்யாவின் என் ஜி கே படம் வெளியானது. மேலும் இவரின் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் விரைவில் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இரண்டாவதாக 2011இல் கீதாஞ்சலி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் கருவுற்றுள்ளார். இதைக் கீதாஞ்சலி தன் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களோடு வெளியிட்டு “ பேபி நம்பர் 3 ஆன் தி வே,” ஜனவரி மாதம் ரிலிஸிற்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.




%d bloggers like this: