November 25, 2020

கதாநாயகனாக களம் இறங்கும் செல்வராகவன்!!! வெளியானது போஸ்டர்!!!

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். செல்வராகவன் எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை கையாள்பவர்.

செல்வராகவன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை, சந்தானத்தின் மன்னவன் வந்தானடி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

இவரின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்ப்பாத்திருந்த நிலையில் செல்வராகவன் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் கதாநாயகனாக களம் இறங்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், யாமினி ஞானமூர்த்தி ஒளிப்பதிவில், நாகூரான் எடிட்டிங்கில், ராமு தங்கராஜ், கபிலன் கூட்டணியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

’சாணிக் காயிதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

கொள்ளைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதை அமைப்பைப் போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் செல்வராகவனின் வலிமையான நடிப்பை இந்த உலகம் காண இருப்பதாக தெரிவித்து போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சினிமா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.





%d bloggers like this: