October 31, 2020

செல்லம்மா வாத்தி கம்மிங், ரகிட ஆகிய மூன்று பாடல்களும் ஒரே காணொளியில்

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடன இயக்குநர்களுள் ஒருவர் ஶ்ரீதர் மாஸ்டர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஏழுமலை படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றினார் குறிப்பாக நடிகர் விஜய் உடன் பல திரைப்படங்களில் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். ஶ்ரீதர் மாஸ்டர் விஜய் உடன் போக்கிரி, வில்லு, துப்பாக்கி, தலைவா, ஜில்லா, புலி, தெறி, சர்கார் ஆகிய திரைப்படங்களில் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் பல பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் குத்தாட்டம் போட வைத்தது. அதில் குறிப்பிட்டுக் கூற வேண்டுமெனில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங், டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல், ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அந்த மூன்று பாடல்களையும் வைத்து டேன்ஸ் கவர் சாங் ஒன்றை உருவாக்கி உள்ளார் ஶ்ரீதர். இந்தக் காணொளி சோனி மியூசிக் சவுத் யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது .

%d bloggers like this: