தமிழில் வெளிவரவிருக்கும் மகேஷ்பாபுவின் ”சரிலேறு நீக்கெவறு”!!!

அனில் ரவிப்புடி எழுத்து இயக்கத்தில், தில் ராஜூ, மகேஷ் பாபு, அனில் சுங்கரா ஆகியோரின் தயாரிப்பில் மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜய சாந்தி, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலக அளவில் 2050 திரைகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்ட தெலுங்குத் திரைப்படம் ”சரிலேறு நீக்கெவறு”. இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனையைப் படைத்தது. 70 கோடியில் படமாக்கப்பட்ட இந்தப் படம் 264 கோடியை வசூல் செய்தது. மேலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாளத்தில் கிருஷ்ணன் என்றப் பெயரிலும், கன்னடத்தில் மேஜர் அஜய் கிருஷ்ணா என்றப் பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே தற்போது இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மகேஷ் பாபுவிற்கு தமிழ் ரசிகர்களும் அதிகம் இருப்பதால் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”இவனுக்கு சரியான ஆள் இல்லை” என்றப் பெயரில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் தமிழிலும் வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.