October 21, 2020

ரஞ்சித் ஜெயக்கொடியின் “யாருக்கும் அஞ்சேல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற “புரியாத புதிர்” திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

அதன் பின், ஹரீஸ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளிவந்த “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் இயக்கத்தில் உருவான இந்த இரண்டு த்ரில்லர் திரைப்படங்களுமே பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படமாகும். இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.

இந்த படத்திற்கு “யாருக்கும் அஞ்சேல்” என்று பெயரிட்டுள்ளனர். இதன் டைட்டில் போஸ்டரை கடந்த மார்ச் மாதம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகியோர் வெளியிட்டனர். மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் இடம்பெற்றுள்ள “அல்லவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்” என்ற வாசகம் ரசிகர்களிடையே திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் இசையமைத்துள்ளார். தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் பதாகையின் கீழ் தேவராஜலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ளார். மேலும் திரைப்படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை வெளியாகவுள்ளது” என்று கூறி படக்குழுவினர்களையும் டேக் செய்துள்ளார்.

%d bloggers like this: