October 21, 2020

ரம்யா நம்பீசனின் புதிய தொடரின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது!!!

சின்னதிரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். இவர் நடிப்பு, பாடல் என இரு துறைகளிலும் பற்பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கொரோனா காலத்தில் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்கும் நிலையில் ரம்யா நம்பீசன், ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ எனும் அவரது யூடியூப் சேனலில் புதுமையான இணையதள நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அந்த சேனலில் ‘ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமன குறிப்பேடுகள்’ என்ற தொடர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.  இந்த நிகழ்ச்சியை இயக்குநர் பத்ரிவெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். அதன் முதல் பகுதி சென்ற வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதி நாளை மாலை வெளியாக உள்ளது.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகளின் இரண்டாவது பகுதி நாளை வெளியாகப் போகிறது எனப் பதிவிட்டுப் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து, “கதாபாத்திரம் ஒத்திகை. இது எல்லா நேரங்களிலும் நடப்பவை. இந்த உண்மையைத் திறந்த புன்னகையுடன் ஏற்றுக்கொள்வோம். நாளை மாலை 5 மணி அளவில் ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகளின் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாகவுள்ளது. இந்தப் புதிய பகுதியை பத்ரிவெங்கடேஷ் எழுதியுள்ளார்” என்றவாறு ட்வீட் செய்துள்ளார்.

%d bloggers like this: