January 18, 2021

”இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல” ரஜினியின் அரசியல் அதிரடி!!!

நடிகர் ரஜினி காந்த் கடந்த 50 வருடங்களாக திரைத்துறையில் கதாநாயகனாக நடித்து சாதனையையும் படைத்து வருகிறார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குநர் பாலசந்தர் அவர்கள் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வரும் ரஜினி காந்த் தமிழக மக்களில் மனதில் ஒப்பற்ற நாயகனாகவும் திகழ்கிறார்.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பல வருடமாக ரஜினி அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக கூறி வருகிறார். தற்போது ரஜினி காந்த் அவர்கள் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழ்கத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழற்ற, மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்று பதிவிட்டுள்ளார். மேலும், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என்றும் “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்” இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்ற ஹேஸ்டேக் மூலமும் பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: