October 21, 2020

படப்பிடிப்பில் களமிறங்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்!!!

பாகுபலி, பாகுபலி 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி மீண்டும் தற்போது “ஆர்ஆர்ஆர் ” என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப் பட்டிருந்தது. தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர் என்பது தெலுங்கு மொழியில் இயக்கப்பட்டு வரும் புதிய திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். டி.வி.வி. தனையா தனது டி வி வி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். எம்.எம். கீரவாணி அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகிய இரண்டு இந்திய போராட்ட வீரர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோருக்கு இடையிலான மோதல்களின் கற்பனை கதையை கொண்ட இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று வெளியிடப்படுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. 300 முதல் 400 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொறோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.

%d bloggers like this: