ராய் லஷ்மி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது!!!

எஸ்.எஸ்.ஐ.பேனரின் கீழ் வினு வெங்கடேஷ் எழுத்து இயக்கத்தில், அஸ்வமித்ரா இசையில், ராய் லஷ்மி, சாக்ஷி அகர்வால், கல்லூரி வினோத், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மமதி சாரி ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சிண்ட்ரெல்லா.
அஸ்வமித்ரா இசையில், ராம்மி ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங்கில் உருவாகி வரும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இந்த திரைப்படத்தின் முதல் தனிப்பாடல் நாளை வெளியாகிறது. கபிலன் வைரமுத்து வரிகளில், ஜி.வி.பிரகாஷ் குரலில் ஆலவஞ்சி எனத் தொடங்கும் இந்தப் பாடல் நாளை வெளியாகிறது.