October 31, 2020

தமிழ் திரைப்பட தயாிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

தமிழ் திரைப்பட சங்கத்திற்கு வரும் நவம்பர் 22ஆம் நாளன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கை கீழ்வருமாறு:
” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.9.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் (A.Nos.1307, 2252 of 2020 & A.Nos 1684 of 2019 & O.A.Nos.207 , 64 & 62 of 2019 & 166 of 2018 in C.S.Nos 875 of 2018 & 165 of 2019) வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 22ம் தேதி (22.11.2020- ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சத்யா ஸ்டூடியோ) வளாகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ஆம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 12.10.2020 காலை 11 மணி முதல் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் (அலுவலக வேலை நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை) நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
* இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்பு மனு கொரியர் மூலம் பெற விரும்பும் தயாரிப்பாளர்கள் தங்களது முகவரியினை எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அளிக்கும் முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் அட்டவணை:

1. 15 .10. 2020 காலை 11 மணி முதல் 23.10.2020 மாலை மூன்று முப்பது மணி வரை வேட்பு மனு தாக்களுக்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூபாய் 100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்)
2. 23. 10. 2020 மாலை மூன்று முப்பது மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.
3. 16 .10. 2020 காலை 11 மணி முதல் 23 .10 . 2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்து விட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களை தபால் அல்லது கொரியரில் அனுப்ப விரும்பும் உறுப்பினர்கள் 23. 10. 2020 மாலை 4 மணிக்குள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது)
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் 23. 10 .2020 மாலை 4 மணிக்கு சீல் வைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.
5. 24 .10 .2020 காலை 11 மணி முதல் 29 .10 . 2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.
6. 29. 10. 2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
* 30 .10. 2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற 22. 10. 2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி சென்னை அடையாறு டாக்டர் எம் ஜி ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு…
தலைவர் பதவிக்கு ரூபாய் 1,00,000/- ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு ரூபாய் 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)

குறிப்பு: தேர்தலில் போட்டியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் தாங்கள் எந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்களோ அந்த பதவிக்கு நிர்ணயம் செய்துள்ள தொகையினை கீழ்கண்ட வங்கி கணக்கு எண்ணில் நேரடியாக அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அக்கவுண்ட் நம்பர் 415419873, இந்தியன் வங்கி ஆயிரம் லைட்ஸ் பிரான்ச், ஐ எஃப் எஸ் சி: IDIB000T020
பெயர்: தமிழ் பிலிம் புரோடுசர்ஸ் கவுன்ஸில்
இப்படிக்கு திருமதி. கே. கே. மஞ்சுளா, தனி அலுவலர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை மற்றும் நீதியரசர் திரு. எம். ஜெயச்சந்திரன், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரி

%d bloggers like this: