October 28, 2020

டைம் டிராவல் செய்து பரத்தை சந்திக்கும் பிரியா பவானி ஷங்கர்!!!

டைம் டிராவலை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. அதே போன்று  டைம்  டிராவலை மையமாக வைத்து “டைம் என்ன பாஸ்” என்ற வெப் சீரிஸ்  உருவாகியுள்ளது.

தமிழ் வெப் சீரிஸ்”டைம் என்ன பாஸ்” தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றது. இது ஒரு சயின்ஸ் ஃபிக்க்ஷன் நகைச்சுவை தொடராகும்.

இதில் நடிகர்கள் பரத், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், கருணாகரன், சஞ்சனா சாரதி மற்றும் அலெக்சாண்டர்  பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். மேலும் அசோக் செல்வன்  சிறப்புத்  தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை, ‘சுட்ட கதை’ புகழ் சுபு இயக்கியுள்ளார். மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர்  அவர்களின்  கவிதாலயா புரொடக்ஷன்ஸ்  தயாரித்துள்ளது. செப்டம்பர் 18, வெள்ளிக்கிழமை முதல்  அமேசான்  பிரைமில்  வெளியாக உள்ள இந்த தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லர்  இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் பரத் அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘டைம் என்ன பாஸ்’  வெப் சீரிஸின் டிரெய்லரை பகிர்ந்து செப்டெம்பர் 18 வெளியாகவுள்ளது என்று கூறியுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: