October 21, 2020

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு லைக்கா புரொடக்ஷன்ஸ்-ன் “கர்மயோகி”!!!

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என்று அனைவரும் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தி, 2.O, தர்பார், மாஃபியா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘ஹேப்பி பர்த் டே டியர் பி எம்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் அவரது 70வது பிறந்தநாளான இன்று தமிழில் “கர்மயோகி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை வழங்குவதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் பெருமைப்படுகிறது”.

மேலும், இத்திரைப்படத்தை எஸ் சஞ்சய் திரிபாதி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், சன்டயல் மற்றும் பன்சாலி புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் மஹாவீர் ஜெயின் தயாரித்துள்ளனர்” என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் திரைப்படத்தின் “கர்மயோகி” என்ற தலைப்பு சுவரொட்டியை பகிர்ந்து அதில் ஒவ்வொரு பயணமும் நமக்குள் இருந்துதான் ஆரம்பமாகிறது என்ற வாசகத்தை அச்சிட்டு, நம் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, விரைவில் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது மோடிஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: