November 1, 2020

தன் தந்தையுடன் சிறு வயது புகைப்படம் – ட்விட்டரில் விஷ்ணு விஷால்!!

VishnuVishal

கொரோனா ஊரடங்கின் காரணமாகப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரங்களைச் செலவிட்டு வருகின்றனர். தற்போதைய இந்த ஊரடங்கு காலத்தில் எல்லா பிரபலங்களும் தங்களின் பால்ய வயது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அதில் தற்போது விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார்

நடிகர் விஷ்ணு விஷாலும் தன்னுடைய கருத்துக்கள், உடற்பயிற்சி செய்யும் காணொளி, தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு என அனைத்தையும் சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் தனது தந்தையுடன் இருக்கும்  சிறு வயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை  தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவருடைய புகைப்படத்தையும் ,நடிகர் விஷ்ணு விஷால் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த புகைப்படத்தையும் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் உண்மையும் ,போலியும் என்று பதிவிட்டிருந்தார். தற்போது விஷ்ணு விஷால் தன்னுடைய தந்தையுடன் சிறுவயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலும் காக்கிச்சட்டை அணிந்திருக்கிறார். தன் தந்தையுடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது எடுத்த புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.

1 thought on “தன் தந்தையுடன் சிறு வயது புகைப்படம் – ட்விட்டரில் விஷ்ணு விஷால்!!

Comments are closed.

%d bloggers like this: