January 18, 2021

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதியப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!!

2012ஆம் ஆண்டு அட்டக்கத்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தையும், ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகியத் திரைப்படங்களையும் இயக்கினார்.

தயாரிப்பாளராகவும் களம் இறங்கிய பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகியப் படங்களை தயாரித்து வெளியிட்ட கையோடு தன்னுடைய உதவி இயக்குநர் சுரேஷ் மணி இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். ஆர்யா குத்துச்சண்டை வீரராக களம் இறங்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆர்யா இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.முரளியின் ஒளிப்பதிவில், செல்வாவின் எடிட்டிங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கலையரசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு சர்பாட்டா பரம்பரை என்று பெயர் வைத்துள்ளனர்.

%d bloggers like this: