October 29, 2020

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட நிலநடுக்கம்!!!

இயக்குநர் பாலாஜி வேம்பு செல்லி இயக்கியிருக்கும் நிலநடுக்கம் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியினை பட குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மான்ட்ரியல் சர்வதேச திரைப்பட விழா என்பது கனடாவில் மான்ட்ரியல் என்னுமிடத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒரு விழாவாகும். 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா 1965ஆம் ஆண்டுவரை இசை சம்பந்தப்பட்ட ஒரு விழாவாக நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த விழாவில் நடனம் கலை திரைப்படங்கள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டது.

பாலாஜி வேம்பு செல்லி அவர்கள் தயாரித்து எழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை மதிவாணன் ராஜேந்திரன் மற்றும் விவேக் ராமானுஜம் ஆகியோர் ப்ளை ஆன் தி வால் பிலிம்ஸ் மற்றும் ஓவர் டன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார்கள். மார்டன் விசர் அவர்களின் இசை அமைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

49 ஆவது மான்ட்ரியல் திரைப்பட விழா வரும் அக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நிலநடுக்கம் திரைப்படமும் தேர்வு செய்யப் பட்டிருப்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

%d bloggers like this: