November 30, 2020

லாரன்ஸ் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!!!

ராகவா லாரண்ஸ் இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் எனப் பலத் திறமைகளை கொண்டவர் ராகவா லாரண்ஸ். சென்னையில் பிறந்த ராகவா லாரண்ஸ் ரஜினி நடிப்பில், 1993ஆம் ஆண்டு வெளியான உழைப்பாளி படத்தில் இடம்பெற்ற ”உழைப்பாளி இல்லாத” பாடலின் மூலம் நடன அமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களுக்கு நடனம் அமைத்த லாரண்ஸ் உன்னைக் கொடு என்னைத் தருவேன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

லாரண்ஸ் இயக்கத்தில் தற்போது லக்‌ஷ்மி பாம்ப் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே தற்போது லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தப் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி கதிரேஷன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில், ருத்ரன் என்றப் பெயரில் உருவாக இருக்கும் இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.

%d bloggers like this: