November 25, 2020

என் பாதுகாப்பான இடம் அட்லி – பிறந்த நாள் வாழ்த்தில் காதலைப் பொழிந்த பிரியா!!!

இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பிறகு ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. முதல் பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகத் தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கினார். பிறகு தொடர்ந்து விஜய் உடன் மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


இதற்கிடையே அட்லி நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் அவருக்குத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அட்லியின் மனைவி பிரியா தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரியா கூறியிருப்பதாவது, “எனது ஒரு பாதுகாப்பான இடம், நான் எங்கு சென்றாலும், வாழ்க்கையில் நான் எதைக் கண்டாலும் இதுதான் நான் நாள் முடிவில் வரும் ஒரே பாதுகாப்பான இடம், நீ என் சப்போர்ட் சிஸ்டம், என் முதுகெலும்பு, என் வலிமையான தூண், எனது உலகம்“ என்று குறிப்பிட்டுத் தனது வாழ்த்துக்களை அட்லிக்குத் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: