October 31, 2020

வெளியானது முத்தையா முரளிதரணின் பயோபிக் படமான “800” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்!!!

முன்னனி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தவிர விஜய் சேதுபதி இந்த வருடம் மட்டும் கடைசி விவசாயி, உப்பெனா, மாஸ்டர், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், லால் சிங் சந்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், இடம் பொருள் ஏவல் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே தற்போது இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “800 தி மூவி” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் டார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். சி.எஸ்.அமுதன் இசையில், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், சிவ நந்தீஸ்வரணின் எடிட்டிங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதணாக நடிக்கிறார்.

இதற்கிடையே முன்னரே அறிவித்தது போல இன்று 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

%d bloggers like this: