கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரங் தே திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகிறது!!!

நித்தின், கீர்த்தி சுரேஷ், நரேஷ், கெளசல்யா, ரோகினி, பிராம்ஜி, வெண்ணலா கிஷோர், வினீத், சத்யம் ராஜேஷ், காயத்ரி ரகுராம் ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் ரங் தே, வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பதாகையின் கிழ் சூர்யதேவரா நாகவம்சி தயாரிப்பில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், நவீன் நூலி எடிட்டிங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ரங் தே திரைப்படம் அடுத்த வருடம் 2021ல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே ரங் தே திரைப்படத்தின் முதல் பாடலாக “எமிட்டோ இதி” வரும் 5ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாக இருக்கிறது. ஆதித்யா மியூசிக் நிறுவனம் இதன் பாடல் உரிமையை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.