November 25, 2020

ஹிப் ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்ட வைரி நாட்டுப்புறப்பாடல்!!

கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அனைத்து தலைவர்களும், பிரபலங்களும் அரசும் சொல்லி வருகிறது. உண்மையில் இசையின்றி மனிதனால் வாழ முடியாது. அதனால் கொரோனா மறந்துவிட்டு இசையோடு வாழப் பழகுவோம் என்று நடிகரும், இசையமைப்பாளரும், இயக்குநருமான ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாட்டுப்புறப் பாடலின் இணைப்பை வெளியிட்டுள்ளார்.

       ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும், தன்னை இசை மட்டுமல்லாமல் வேறு தளத்தில் நிரூபித்தவர். அதன் பிறகு “ நட்பே துணை “ நான் சிரித்தால்” என்று அவருடைய நடிப்புப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

      இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வைரி என்ற நாட்டுப்புறப் பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது சோனி சவுத் யுடியூப் சேனலில் இன்று வெளியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

      வைரி என்ற நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பில் மொத்தம் நான்கு இசைப் பாடலும், இரண்டு தனி இசை மட்டும் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை எழுதியவர்கள் அந்தோணி தாசன், வல்லப்பதாஸ் எழுதியிருக்கிறார்கள். பாடியவர்கள் , அந்தோணி தாசன், சின்னப்பொண்ணு,மீனாட்சி இளையராஜா,அருள்,வல்லபதாஸ். மற்றும் இப்பாடலுக்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இதன் காணொளியை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கலாம்.

%d bloggers like this: