November 25, 2020

மனதை அமைதிப்படுத்தும் ஹிப் ஹாப் ஆதி பாடல் !!

கொரோனா ஊரடங்கில் பெருவாரியான மக்களின் பொழுது போக்கு டிவி, மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களாகத் தான் உள்ளது. பல துறைகள் இந்த காலகட்டங்களில் முடங்கி இருந்தாலும், திரைத்துறை முற்றிலுமாக முடங்கி உள்ளது.

       இருப்பினும் இந்த நேரத்தைப் பயன்படுத்திப் பல திரைப் பிரபலங்களும், கலைஞர்களும், சமூக வலைத்தளங்களில் தங்களின் படங்கள், பாடல்கள் மற்றும் பல விஷயங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

      இந்நிலையில் தற்போது நடிகர்,இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ‘அன்புள்ள கில்லி‘ படத்திலிருந்து ஒரு பாடலின் காணொளியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

      ராமலிங்கம் ஸ்ரீநாத் இயக்கிய படம் ‘அன்புள்ள கில்லி’. இந்த திரைப்படம் ஒரு ‘லாப்ரடோர் நாய்‘ அமிகோவை அடிப்படையாகக் கொண்டது, இப்படத்தில் இந்த நாய் தான் பிரதான  கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்த படத்தில் தான் முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் விலங்குகள் பேசப் போகிறது.இதில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட்டில் பணியாற்றிய ஒரு குழுவால் மேற்பார்வையிடப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் மைத்திரேய ராஜசேகர், துசாரா விஜயன், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், மைம் கோபி, வி.ஜே.ஆஷிக், நாஞ்சில்விஜயன், இளவரசு, பூ ராமு, இந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் திங்க் மியூசிக் இந்தியா” யுடியூப் சேனலில் வெளியாகியுள்ளது

%d bloggers like this: