November 30, 2020

பிரபாஸின் பிறந்த நாளில் வெளியான “பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம்”!!!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரபாஸின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தற்போது ராதே ஷ்யாம் படக்குழுவினர் பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம் என்ற சிறப்பு காணொளியை வெளியிட்டுள்ளனர்.

யூ வி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபதி, பிரசீதா உப்பலபதி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் பிரபாஸ் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும், பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங்கில், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகும் இந்தப் படம் 1970ஆம் ஆண்டு யூரோப்பில் நடப்பது போல கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் இத்தாலி, ஜியார்ஜியா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழியில் வெளியாக இருக்கும் இந்தப் படம் பிரபாஸின் 20வது படமாகும்.
பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ள பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம் காணொளி இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

மேலும் இன்று பிறந்த நாள் காணும் பிரபாஸ் அவர்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: