November 30, 2020

8 கோடி பார்வைகளைப் பெற்ற “பிரேக் அப் சாங்”

”ஹிப் ஆப் ஆதி”யின் நடிப்பில் வெளியான படம் நான் சிரித்தால். இதில் ஹிப் ஆப் ஆதி தான் ஹீரோ. கெக்க பெக்க என்ற குறும்படத்தின் கதைக் கருவை வைத்து இயக்கப்பட்ட படம் தான் நான் சிரித்தால். ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்திருப்பார். ரானாவின் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் ஹிப் ஆப் ஆதியின் இசையில் வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மிடில் கிளாஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் வில்லனாக நடித்திருப்பார். 

இந்தப் படத்தில் பிரேக் அப் சாங் என்று ஒரு பாடல் யூ டியூபில் வெளியானது. வெளியானது முதலே அதிகமான பார்வைகளைப் பெற்றுவந்த நிலையில் தற்போது 8 கோடி பார்வைகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. இதனை திங் மியூசிக் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பதிவினை இந்தப் படத்தின் கதாநாயகியான ஐஸ்வர்யா மேனன் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

%d bloggers like this: