October 21, 2020

”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்!!!

ஜே.பார்த்திபன் இயக்கத்தில், பன்னீர் செல்வத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில், அருள் தேவ் இசையில் ஸ்ரீகாந்த், ராய் லஷ்மி, தேவ் கில், நைரா ஷா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியீடு காணவிருக்கும் திரைப்படம் ’மிருகா’.

கோத்தகிரியில், இடுப்பானையில் திடீரென நுழைந்த காட்டுப் புலி மனிதனை வேட்டையாடத் துவங்குகிறது. அதற்குப் பின்னர் நடக்கும் திக் திக் சம்பவங்களை நோக்கிக் கதை அமைந்திருக்கிறது. ஜாக்குவார் ஸ்டூடியோஸின் கீழ் வினோத் ஜெயின் தயாரிப்பில் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே மிருகா திரைப்படத்தின் பஃர்ஸ்ட் சிங்கிள் பாடலை தனுஷ் வெளியிட இருப்பதாக ஜாக்குவார் ஸ்டூடியோஸ் அறிவித்திருந்தது.

இதற்கிடையே இன்று மாலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், முதல் பாடலாக ‘ஐ யெம் பேட் பாய்’ பாடலின் லிரிக்கல் காணொளியை வெளியிட்டுள்ளார். ஏ.பி.ஆர் ஜெயராம் வரிகளில், ரஞ்சித் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

%d bloggers like this: