October 31, 2020

மாஸ்டர் பட அப்டேட் நாளை மாலை வெளியீடு

மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் இவர் இயக்கி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்திற்கு “ ராக் ஸ்டார்” என்றழைக்கப்படும் அனிருத் ரவிசந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் நாளை அக்டோபர் 16 அன்று தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.

இதற்கு மாஸ்டர் படக் குழு சார்ப்பாக அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  தற்போது சமூக வலைத் தளப்பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை மாலை 6 மணி அளவில் அப்டேட்  வெளியிடப் போவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ”க்விட் பன்னுடா” என்ற ஹேஸ்டேக்குடன் விஜய்யின் மாஸ்டர் பட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: