January 18, 2021

மாஸ்டர் படம் வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வெளியாகிறது!!!

மாநகரம், கைதி ஆகிய படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஷேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன் வசனத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், தீனா, ஸ்ரீமன் உட்பட மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதற்கிடையே தீபாவளியன்று மாஸ்டர் பட டீசர் வெளியானது. அடுத்த ஆண்டு பொங்கலன்று இந்தப் படம் வெளியாவதாக மாஸ்டர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய் ஜே.டி என்றக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மாஸ்டர் படம் வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி, புதன் கிழமை வெளியாகிறது. இந்தச் செய்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது.

%d bloggers like this: