November 25, 2020

“மாஸ்டர்” தியேட்டரில் தான் வெளியாகும் – லோகேஷ் கனகராஜ் திட்டவட்ட அறிவிப்பு!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், ரம்யா சுப்ரமணியன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”.

இத்திரைப்படத்தை அனிருத் இசையில், சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகள் திறக்கப்படாததை ஒட்டி சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் முன்னணி நடிகர்களான சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படமும் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவான “மாஸ்டர்” திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற வதந்திகள் இணையத்தில் பரவியது. அதற்கு படக்குழுவினர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று கூறியிருந்தனர்.

இருப்பினும் திரைப்பட வெளியீடு பற்றிய வதந்திகளால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் படத்தை பற்றிய தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், “மாஸ்டர்” திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இன்று கோயம்புத்தூரில் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியாகும் என்றும் திரையரங்குகள் திறந்த பின்னர் கட்டாயம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

%d bloggers like this: