November 25, 2020

மாஸ்டர் திரைப்படம் கட்டாயமாக திரையரங்கில் தான் வெளியிடப்படும்

கொரோனா நெருக்கடியின் காரணமாக சமீப காலமாக சில திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் கட்டாயமாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வெளிவர இருக்கும் ”மாஸ்டர்” திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், மக்கள் நாயகன் விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், கௌரி ஜி. கிஷன், ரம்யா சுப்ரமண்யன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகலாம் என்ற வதந்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கண்டிப்பாக ”மாஸ்டர்” திரையரங்கில் தான் வெளியாகும் என்று தெரிவித்திருந்ந்தார். ஆனால் இன்று மீண்டும் இது குறித்த வதந்திகள் கிளம்பியது.

இதனையடுத்து திரைத்துறையைச் சார்ந்தவர்காள் எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் படக்குழுவினர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் கட்டாயமாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

%d bloggers like this: