October 29, 2020

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!!!

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற திரைப்படத்தின் முதல் பாடல் இந்த மாதம் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

நாட்டாமை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் இந்தப் படத்தில் நடிக்கும் போது இவருக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது. மொத்தம் ஆறு மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் இரண்டினையும் நந்தி விருதுகள் இரண்டினையும் இவர் பெற்றிருக்கிறார்.

இவர் 2013ஆம் ஆண்டில் வெளிவந்த விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற திரைப்படத்தில் மியாஸ்ரீ சௌமியாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ஜி எஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பூக்கடை ஜி சேட்டு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தை நல் செந்தில்குமார் அவர்கள் இயக்குகிறார். சுந்தர்ராஜன், மனோஜ் குமார், அப்புக்குட்டி, மீரா கிருஷ்ணன், பசங்க சிவகுமார், தவசி, பெஞ்சமின் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 24ஆம் தேதி அன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: