October 31, 2020

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது.

மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பில் வெளிவர இருக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு திரைப்படத்தின் முதல் பாடலான நெஞ்சு அழுத்தக்காரி….எனத்தொடங்கும் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தை பூக்கடை ஜி சேட்டு அவர்கள் தயாரித்து வழங்குகிறார். நல் செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், மியா ஸ்ரீ சௌமியா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இன்று வெளியாகியிருக்கும் நெஞ்சை அழுத்த காரி என்னும் இந்த பாடலுக்கு மோகன் ராஜன் அவர்கள் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். ஜித்தின் மற்றும் நமிதா ஆகியோரது குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடலின் வரிகள் இதோ:
” ஆண்:
நெங்கழுத்தக்காரி…என் நெஞ்சழுத்தக்காரி… உன் மனச நீ சொல்லாம போகாத…
சிங்கழுத்துக் காரி… என்… செங்கழுத்துக் காரி… ஏன் உசுர நீ கொள்ளாமல் கொல்லாத…
வட்ட கருப்பட்டி கண்ணுல நான் உருகுறேன் ஒறங்காம..
செக்க சிவந்த உதட்டுல நான் தேயிறேன் அலுங்காம…
வானவில்லா சிரிச்சி போற..வாலிபத்த கரச்சி போற..
இது போதும் எனக்குள் நொழஞ்சவ எவலும் இல்ல …
சண்டக்கோழி..சண்டக்கோழி… கொத்திப்போசே … நெஞ்சக் கீறி…

சேத்து வச்ச ஏன் நெனப்ப செலவு செய்ய வாடி புள்ள
காத்திருக்கிறேன் உனக்காக புரியாதா….
வளர்த்து வச்ச உன் வளப்ப எழுதி நீயும் தாடி புள்ள..
தவிச்சிருக்கேன் அதுக்காக தெரியாதா…
சீனி உதட்ட சுத்தி பாக்க எறும்பா நானும் வரலாமா….
ஏண்டி புள்ள அதுக்கும் மொறச்சி பாக்குறியே…
உன் முகத்த நிலவா மாத்தும் சூரியன் நான்தான் விடலாமா…
ஏன் நிழலில் உன் மேல் விழுந்தா போங்குறியே..
சோலக்காட்டு போம்மபோல மாட்டிக்கிட்டேன் என்ன சொல்ல ரதியே என்னை ரகள பண்ணி போற..
சண்டக்கோழி…சண்டக்கோழி… கோத்திபோச்சே… நெஞ்சக்கீறி..

பெண்:
உனக்குள்ளும் மனசிருக்கு…அதுக்குள்ளும் அழகிருக்கு…
பாத்தேனே நானும் இப்போ கண்ணால..
எனக்கும்தான் நெனப்பிருக்கு…அதுக்குள்ள நீயிருக்க…
பாத்திருப்ப நீயும் இப்போ தன்னால…

ஒன் உருட்டு பார்வக்குள்ள என்ன சுருட்டி போகாத
உன்மேல ஆசவச்சேன் விலகாத…
உன் முறுக்கு மீசக்குள்ள என்ன சுருக்கி போகாத..
உன் நினப்ப எம்மனசில் பொழங்காத..
காத்தாடி நூலப்போல ஆணேனே நானும் உள்ள உறவாஞ்சுருக்கு உசுற மாட்டி போற

மச்சக்காரி…மச்சக்காரி…
தள்ளிப்போடா … நெஞ்சக்கீறி…”

இந்த பாடலை மாங்கோ மியூசிக் தமிழ் வெளியிட்டுள்ளது. இந்த முதல் பாடலின் வெளியீட்டை படக்குழுவினர் தமது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் நடிகர் ஜெயம் ரவி இந்த பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


%d bloggers like this: