November 25, 2020

மாஸ்டர் திரைப்பட இயக்குநரின் புதிய திரைப்படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த திரைப்படத்திற்கான புதிய தகவல்களை நாளை மாலை 6 மணிக்குத் தெரிவிக்கப் போவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

2016ஆம் ஆண்டு வெளிவந்த அவியல் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள். இவர் மாநகரம்(2017), கைதி(2019) போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் மாநகரம் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விஜய் விருது மற்றும் கைதி படத்திற்காக ஃபேவரைட் இயக்குநருக்கான ஜீ சினி விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் இவர் இயக்கி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை நாளை மாலை 6 மணி அளவில் வெளியிடப் போவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: