November 25, 2020

சாந்தனு பிறந்தநாளில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ’மாஸ்டர்’ படக்குழு!!!

தற்போது தமிழ்த் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக உருவாகி வருகிறார் சாந்தனு. இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர், முருங்கைக்காய் சிப்ஸ், இராவண கூட்டம் ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளது. இதில் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் தளபதி விஜய்யுடன் சாந்தனு நடித்திருப்பதால், என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தை சாந்தனு ஏற்று நடித்திருப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று சாந்தனு தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இன்று காலை தன் டிவிட்டர் பக்கத்தில் தன் தாய், தந்தைக்கு நன்றி கூறிப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’மாஸ்டர்’ படக்குழு சாந்தனுவின் பிறந்த நாளை முன்னிட்டு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சாந்தனு உள்ளார். மேலும் சாந்தனு அந்தப் புகைப்படத்தில் ’ஸ்டீஃபன் ஜெஃபரிஷ் கலை அறிவியல் கல்லூரி’ என்ற பெயர் பொறிக்கபட்ட அடையாள அட்டையையும் அணிந்துள்ளார். இதன் மூலம் சாந்தனு மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.




%d bloggers like this: