December 3, 2020

ஆசான் பாரதிராஜாவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறும் மனோபாலா!!!

இயக்குநர் மனோபாலா அவர்கள் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த ஆசிரியர், இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “என் ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள் கூடிய நமஸ்காரங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா அவர்கள் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர். பத்மஸ்ரீ விருது வென்ற இவர் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

இவருடைய உதவி இயக்குநர்களுள் ஒருவராக இருந்தவர் இயக்குநர் மனோபாலா அவர்கள். இவர் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருக்கிறார்.

1979ஆம் ஆண்டு வெளிவந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்திற்காக இயக்குநர் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குநராக மனோபாலா அவர்கள் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





%d bloggers like this: