November 25, 2020

ஹிந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர் இயக்குநரின் திரைப்படம்!!!

மாநகரம் தமிழ் திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு அவர்கள் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் அவர்கள் ஒளிப்பதிவாளராகவும், ஃபிலோமின் ராஜ் அவர்கள் எடிட்டராகவும் பணியாற்றி இருந்தார்கள்.

சுந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். மேலும் இவர்களோடு சார்லி, மதுசூதன் ராவ், முனீஸ்காந்த், விவேக் பிரசன்னா, ரவி வெங்கட்ராமன், கார்த்திக் யோகி, சாய் தீனா, அருண் அலெக்சாண்டர், ஷா ரா, சதீஷ்குமார், அம்ரேஷ், டைகர் கார்டன் தங்கதுரை, ரேகா சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விஜய் விருது கிடைத்தது. மேலும் பிலோமின் ராஜ் அவர்களுக்கு சிறந்த எடிட்டருக்கான விஜய் விருதும் கிடைத்தது.
தற்போது இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹிந்தியில் இந்த திரைப்படத்தை இயக்குநர் சந்தோஷ்சிவன் அவர்கள் இயக்க இருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் விக்ராந்த் மாசி சிங் அவர்கள் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

இயக்குநர் சந்தோஷ் சிவன் அவர்கள் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பல விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார். தமிழ் ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் இவர் பணியாற்றி இருக்கிறார்.


தற்போது இவர் மாநகரம் திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் விக்ராந்த் மாசே சிங் அவர்களை வைத்து ரீமேக் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 10, 2021 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




%d bloggers like this: