December 3, 2020

மாளவிகா மோஹனனின் பிறந்தநாளில் மாஸ்டர் இயக்குநர் வெளியிட்ட போஸ்டர்!!!

விஜய் நடிப்பில் திரைக்குவர இருக்கும் ’மாஸ்டர்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தப் படத்தின் நாயகி மாளவிகா மோகனனின் பிறந்த நாளையொட்டி சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன்.

விஜய்யுடன் இணைந்து அர்ஜூன் தாஸ், மகேந்திரன், சந்தனு மற்றும் பலர் நடித்து உள்ளனர். ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த மாஸ்டர் படம், முழு ஊரடங்கால் வெளியிட முடியாமல் போனது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று மாளவிகா மோஹனன் பிறந்தநாளை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படக் குழுவினர் டிவிட்டர் பக்கத்தில்  விஜய் மற்றும் மாளவிகா மோஹனன் இருக்கும் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு உள்ளனர்.

இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ராஜசேகர், மகேந்திரன் மற்றும் பலர் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

                                                 

                                                       

                                                       

%d bloggers like this: