October 31, 2020

வெளியானது சூர்யாவின் மேக்கிங் ஆஃப் மாறா!!!

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்னா பால முரளி நடிப்பில் வரும் 30ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று.

கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்கங்கள் திறக்கபப்படாத காரணத்தால் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு வரும் 30ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே தற்போது “மேக்கிங் ஆஃப் மாறா” காணொளியின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. ஸ்க்ரிப்ட் டூ ஸ்கிரீன் இந்த கதை எப்படி சாத்தியமானது என்றும், இதற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் மேற்கண்ட முயற்சிகளைப் பற்றியும் இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.

சூரரைப் போற்று வெளியாக இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் மேக்கிங் ஆஃப் மாறா இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

%d bloggers like this: