November 30, 2020

மாறா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது!!!

மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில், திலீப் குமார் இயக்கத்தில், பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தாயாரிப்பில், நீலன் மற்றும் பிபின் திரைக்கதையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாறா”.

ஏற்கனவே மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் கூட்டணியில் விக்ரம் வேதா திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் “மாறா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீநிவாசன் எடிட்டிங்கில், தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் உருவான இந்தப் படம் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

இதற்கிடையே மாறா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. சித் ஸ்ரீராம் குரலில், தாமரையின் வரிகளில் “யார் அழைப்பது” பாடல் திங்க் மியூசிக் இந்தியா யூடியுப் சேனலில் நாளை வெளியாக இருக்கிறது.

%d bloggers like this: